ARVINDH MAHARAJ
Everything is Possible Nothing Impossible Only by Humanitarian
Tuesday, December 31, 2024
பிரபஞ்சம் பற்றிய புரிதல் இல்லாத மதங்கள் . . . .
இதுவரை மதங்களால் உருவாக்கப்பட்ட உருவகப்படுத்தப்பட்ட கடவுள்கள் அதிகபட்சமாக பூமியை படைத்து காத்து வருகிறார் என்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அறிவியல் வளர்ச்சி பெற்ற பின்னர் பிரபஞ்சத்தை பற்றிய அறிவு வளர்ந்து வரும் இக்காலத்திற்கு பழைய மதங்களில் சொல்லப்பட்ட கடவுள்களின் ஆற்றல் மிகக் குறைந்ததாகவே உள்ளது. இனி பழைய மதங்கள் காலத்திற்கு ஏற்ப அறிவியல் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு தங்கள் மதக் கருத்துக்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் தோன்றிய வள்ளல் பெருமான் அவர் கட்டமைத்த சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் கவனிக்க சமயம் மதம் அல்ல சங்கம். அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை மறுதலித்து அறிவியலோடு உடன்படுகின்ற மார்க்கத்தை உருவாக்கினார். அதில் பிரபஞ்சத்தை பற்றிய புரிதல் அதன் பிரமாண்டம் பற்றிய தெளிவு என அறிவியல் சார்ந்தே சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை ஏற்படுத்தினார்.
விவேகானந்தர் பழைய மதங்களை விடுத்து Universal Religion உருவாக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார். ஆனால் அவருக்கு முன்பாகவே வள்ளல் பெருமான் Universal Truth, Universal God, Nature God, Light and Energy God பற்றி வெளியிட்டுள்ளார்.
மதங்கள் சமயங்கள் ஒருநாளும் மனிதர்களை ஒருங்கிணைக்காது என்பதை உணர்ந்தே மூட மதங்கள் அனைத்தும் அழிந்து போகட்டும் என்று கூறியுள்ளார். உலக சகோதரத்துவத்தை, இந்த உலகில் எல்லா உயிர்களுக்கும் உள்ள உரிமையை வலியுறுத்தியே சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை உருவாக்கினார். இன்றைய மேம்பட்ட பிரபஞ்ச அறிவியல் கருத்துக்களை வள்ளல் பெருமான் தனது அருளறிவு மூலம் கண்டுணர்ந்து வெளிப்படுத்தி உள்ளார்.
வருங்காலத்தில் பிரபஞ்ச அறிவியலுடன் ஒத்துப் போகாத மதங்கள் வெறும் மூளைச்சலவையை மட்டுமே வைத்து மக்களை பிளவுபடுத்த முடியாது. மக்கள் விழிப்புணர்வு பெற்று விட்டால் சமயங்கள் மதங்கள் காணாமல் போவது உறுதி.
நக்கினம் சிவம்
Subscribe to:
Posts (Atom)